உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / குமரி பகவதி அம்மன் கோவில் நடைதிறப்பு நேரம் அதிகரிப்பு

குமரி பகவதி அம்மன் கோவில் நடைதிறப்பு நேரம் அதிகரிப்பு

நாகர்கோவில்: 'சபரிமலை சீசன் துவங்க உள்ள நிலையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை, நவ., 17- முதல் கூடுதலாக ஒரு மணி நேரம் திறக்கப்படும்' என, தேவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களில் ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கும் வருகின்றனர். சபரிமலை தரிசனத்திற்கு முன் அல்லது தரிசனம் முடிந்து திரும்பும் போது, கன்னியாகுமரி வந்து செல்வதால் நவ., 15 முதல் ஜன., 20 வரை கூட்டம் களைகட்டும். இந்த ஆண்டும் கூடுதல் பக்தர்கள் வருவர் என்பதை கருதி, தேவையான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகம் செய்கிறது. இதற்கிடையில் சபரிமலை சீசனில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடையை கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன் படி அதிகாலை, 4:30 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம், 12:30 மணிக்கு பதிலாக, 1:00 மணிக்கு அடைக்கப்படும். மாலை, 4:00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு, 8:30 மணிக்கு பதிலாக இரவு, 9:00 மணிக்கு அடைக்கப்படும். நவ., 17 முதல், 65 நாட்கள் இந்த உத்தரவு அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை