உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த நபருக்கு காப்பு

அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த நபருக்கு காப்பு

நாகர்கோவில்:அருவியில் குளித்த மாணவியை கட்டிப்பிடித்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கொல்லம் பெரும்புழாவை சேர்ந்த 17 வயது மாணவி, குடும்பத்தினருடன், குமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். அங்கு மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி கூச்சலிட்டதும், அப்பகுதியில் நின்றவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாஸ்திரி நகரை சேர்ந்த மாரிசெல்வம், 32, என்பதும், வங்கி ஊழியர் என்பதும் தெரிய வந்தது. அவரை போக் சோவில் மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி