உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு டாட்டா : காதலியை கரம் பிடித்தவர் மீது வழக்கு

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு டாட்டா : காதலியை கரம் பிடித்தவர் மீது வழக்கு

நாகர்கோவில்: ஆறு மாதங்க ளுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கைவிட்டு, ஆறு ஆண்டுகளாக காதலித்த பெண்ணை கரம் பிடித்த இளைஞர், அவரது பெற்றோர் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே ஆற்றுாரை சேர்ந்த எம்.சி.ஏ., பட்டதாரி பெண்ணுக்கும், புதுக்கடை அருகே பைங்குளத்தை சேர்ந்த இளைஞருக்கும் ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, நேற்று முன்தினம் உண்ணாமலை கடை பகுதியில் திருமண மண்டபத்தில் பெண் வீட்டார் திருமண வரவேற்பு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், பெண்ணின் தந்தையை அழைத்த ஒருவர், 'உங்கள் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள். 'பெங்களூருவில் ஒரு வழக்கில் மணமகன் கைதாகி உள்ளார்' என, கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். தொடர்ந்து, மணமகன், அவரது பெற்றோரை தொடர்பு கொள்ள முடியாததால், வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார், பெங்களூருவில் இளைஞர் வேலை பார்த்த ஐ.டி., நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, அவருக்கும், அவருடன் வேலை பார்த்த திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணுக் கும் அக்., 25-ல் திருமணம் நடந்தது தெரியவந்தது. அவர்கள் இரு வரும் ஆறு ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிறுத்தப்பட்டது. மணப்பெண் வீட்டார் புகாரில், மணமகன், அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள் ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை