உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் தமிழகத்தில் இல்லை * சுகாதாரத் துறை இயக்குனர் பேட்டி

முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் தமிழகத்தில் இல்லை * சுகாதாரத் துறை இயக்குனர் பேட்டி

நாகர்கோவில்:சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை 'நிபா' வைரஸ் பாதிப்பால், யாரும் தனிமைப்படுத்தப்பட வில்லை. தற்போதைய சூழ்நிலையில், முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்படவில்லை.கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி மற்றும் நோய் தொற்று இருப்பதாக சந்தேகப்படும் நபர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மூன்று மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. 'நிபா' வைரஸ் பொதுவாக வவ்வால்களில் இருந்து பரவுகிறது. இது தொடர்பாக, கிண்டி ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கோ, சுகாதார நிலையங்களுக்கோ சென்று சோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை