உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மனைவியை அடுத்து கணவரும் தற்கொலை கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகம்

மனைவியை அடுத்து கணவரும் தற்கொலை கன்னியாகுமரி மாவட்டத்தில் சோகம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே தொலையாவட்டம் புல்லங்குழியைச் சேர்ந்தவர் கமலேசன், 51, கொத்தனார். இவரது மனைவி ஸ்டாலின் மேரி, 44. இவர்களின் மகன், நாகர்கோவில் தனியார் பாலிடெக்னிக்கில் படிக்கிறார். இவருக்கு கடந்த மாதம் 19ல், கணவன், மனைவி இரு வரும் ஒன்றாக கல்லுாரிக்கு சென்று கட்டணம் செலுத்தினர். இதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டாலின் மேரியின் நகையை அடகு வைத்தனர். வீட்டுக்கு திரும்பிய பின், ஸ்டாலின் மேரி துாக்கில் தொங்கினார். சத்தம் கேட்டு ஓடி வந்த கமலேசன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். இரு வாரங்களாக சிகிச்சை பெற்ற ஸ்டாலின் மேரி நேற்று முன்தினம் இறந்தார். நகையை அடகு வைத்த வருத்தத்தில் அவர் தற்கொலை செய்தது தெரிந்தது. ஸ்டாலின் மேரி உடல் அடக்கம் நடந்த நிலையில், இறுதிச் சடங்குகளை முடித்து வீட்டுக்கு வந்த கமலேசன், மனைவியை இழந்த துாக்கம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். பின், அவர் மது வாங்கி வந்து, அதில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கருங்கல் போலீசார் அவரது உடலை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ