மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவரை கடத்தி தாக்கிய இருவருக்கு காப்பு
30-May-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே பைக் மீது வேன் மோதியதில் நண்பர்கள் இருவர் பலியாகினர்.கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் 46. இவர் மைக் செட் கடையில் வேலை செய்து வந்தார். திருமணமாகி மனைவி, ஏழு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவரது நண்பர் நாகர்கோவில் அருகே கோட்டாரைச் சேர்ந்த சுந்தர் 40. தச்சு தொழிலாளியான சுந்தருக்கு திருமணமாகி மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் குடும்பத்துடன் கொட்டாரத்தில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11.00 மணியளவில் சுப்ரமணியமும் சுந்தரும் வேலை முடிந்து ஒரே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பால்குளம் பைபாஸ் பகுதியில் எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாகினர். அஞ்சு கிராமம் போலீசார் அவர்களது உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
30-May-2025