உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மூதாட்டியிடம் நகை பறித்த மேற்குவங்க நபருக்கு சிறை

மூதாட்டியிடம் நகை பறித்த மேற்குவங்க நபருக்கு சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், புதுப்பாடியை சேர்ந்தவர் ஏலியாம்மா, 82. நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாலிபர் ஒருவர், வீட்டுக்குள் பாம்பு புகுந்ததாக கூறினார். இதில் பயந்து போனவர் நாற்காலியில் இருந்து இறங்கி, வீட்டின் முன் வந்தார். அப்போது, வாலிபர் திடீரென ஏலியாம்மா கழுத்தில் கிடந்த, ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பினார். இதில் கீழே விழுந்து, ஏலியாம்மாவின் தலையில் காயம் ஏற்பட்டது. புகாரின்படி, கோதமங்கலம் போலீசார், அப்பகுதியின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நகையை பறித்து தப்பியது, மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாதை சேர்ந்த முகம்மது ஹஸ்மத், 27, என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ