மனைவி தற்கொலை கணவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்த பெண் துாக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கணவரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வ சரண் 25. டிரைவர். மனைவி ரேஷ்மா 20. இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். உறவுமுறையில் செல்வ சரண் ரேஷ்மாவுக்கு அத்தை மகன் ஆவார். திருமணத்திற்கு பின் இவர்கள் கீழமறவன் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தனர். கணவன் ,மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ரேஷ்மா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோட்டார் போலீசார் விசாரணையில் ரேஷ்மாவை கணவர் தற்கொலைக்கு துாண்டியது தெரிய வந்தது. ரேஷ்மா தாய்க்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜில் 'எனது கணவருக்கு என்னை பிடிக்கவில்லை. அவர் வேறு திருமணம் செய்யப் போகிறார். காதலித்தது தவறு' என குறிப்பிட்டு பின்னர் அழுதுள்ளார். இதை தொடர்ந்து செல்வ சரணை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.