உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை

நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை

நாகர்கோவில்:பொட்டல்குளத்தில், நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.கன்னியாகுமரி மாவட்டம், பொட்டல்குளம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அய்யப்பன், 33; எலக்ட்ரீஷியன். நேற்று மதியம் கொட்டாரம் அருகே உள்ள பொட்டல்குளம் குருசடி அருகே நின்று கொண்டிருந்த அவரை, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியது.இரண்டு நாட்களுக்கு முன் அய்யப்பன் அதே பகுதியை சேர்ந்தவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். அதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. அய்யப்பன் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி