உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிரஷர் நிறுவனங்கள் டிரான்சிட் பாஸ் தர மறுப்புவேலையிழந்த டிரைவர்கள் கலெக்டரிடம் மனு

கிரஷர் நிறுவனங்கள் டிரான்சிட் பாஸ் தர மறுப்புவேலையிழந்த டிரைவர்கள் கலெக்டரிடம் மனு

கிரஷர் நிறுவனங்கள் டிரான்சிட் பாஸ் தர மறுப்புவேலையிழந்த டிரைவர்கள் கலெக்டரிடம் மனுகரூர்:கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்கவில்லை என்பதால் வேலை இழந்து தவித்து வருகிறோம் என, கனரக லாரி டிரைவர்கள், கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில் வாடகை மற்றும் தனிநபர் வாகனங்களை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். அதில், 500க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்கிறோம். இதில் கல்குவாரி, கிரஷர் நிறுவனங்களில் பணம் செலுத்தி கட்டுமான பொருட்களை ஏற்றி வருகிறோம். அங்கு, டிரான்சிட் பாஸ், ஜி.எஸ்.டி., பில் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும். ஆனால், ஜி.எஸ்.டி., பில் மட்டும் வழங்கி விட்டு டிரான்சிட் பாஸ் வழங்க கிரஷர் உரிமை யாளர்கள் மறுக்கின்றனர்.சோதனை செய்யும் போது டிரான்சிட் பாஸ் இல்லை என்றால், வழக்கு பதிவு செய்து சிறைக்கு செல்ல நேரிடுகிறது. தற்போது, 12க்கும் மேற்பட்ட டிரைவர்கள் சிறையில் இருப்பது மட்டுமின்றி வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மாதமாக, உரிமையாளர்கள் வாகனங்களை இயக்கவே அச்சப்படுகின்றனர். இதனால், வேலையிழந்து மிகவும் கஷ்டப்படுகிறோம். வாழ்வாதாரத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி