உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நரிக்கட்டியூர் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குட்டை மாணவ, மாணவிகளுக்கு காத்திருக்கு ஆபத்து

நரிக்கட்டியூர் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குட்டை மாணவ, மாணவிகளுக்கு காத்திருக்கு ஆபத்து

நரிக்கட்டியூர் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குட்டைமாணவ, மாணவிகளுக்கு காத்திருக்கு ஆபத்துகரூர், அக். 4- நரிக்கட்டியூர் பள்ளி வளாகத்தில், கழிவுநீர் குட்டை இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் அருகே, நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 446 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தை ஒட்டி பள்ளம் உள்ளது. இதில், கழிவுநீர் தேங்கி இருப்பதால், ஆபத்தை உணராமல் மாணவ, மாணவிகள் சென்றால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் கிணறு உள்ளது. கிணற்றில் போர்வெல் அமைக்கப்பட்டு, அதிலிருந்து பள்ளி பயன்பாட்டுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த கிணறு அருகில் குட்டை போல பெரிய பள்ளம் உள்ளது. அதில், முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது. தினமும் மதிய வேளையில் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் விளையாடுகின்றனர்.உணவு இடைவெளி, பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் குட்டை, கிணறு அருகே சென்று எட்டி பார்த்து விடக்கூடாது என்பதற்காக, பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்களை, மீறி பள்ளி மாணவர்கள் சென்று விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோருக்கு இருக்கிறது. விடுமுறை நாட்களில் அந்த பகுதி குழந்தைகள் வந்து செல்கின்றனர்.மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமின்றி, அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக குட்டையை மூட, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை