உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டூவீலர் மோதி விபத்து நடந்து சென்ற சிறுவன் காயம்

டூவீலர் மோதி விபத்து நடந்து சென்ற சிறுவன் காயம்

டூவீலர் மோதி விபத்து நடந்து சென்ற சிறுவன் காயம்அரவக்குறிச்சி, :ஆந்திர மாநிலம், திருச்சுழி அருகே அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் கருப்பசாமி, 10. இவர் கரூரில் இருந்து, திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி அருகே பெரிய மஞ்சுவளி பஸ் நிறுத்தம் அருகே, நடந்து சென்றபோது, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே சொக்கலிங்கபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த அங்குசாமி மகன் சந்தோஷ், 31, என்பவர் தலைக்கவசம் அணியாமல் டூவீலரை வேகமாக ஓட்டி வந்து, சிறுவன் மீது மோதினார். படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனின் தந்தை பாலசுப்பிரமணியம் கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி