உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு பள்ளி வளாகத்தில் டைனோசர் உருவம்

வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு பள்ளி வளாகத்தில் டைனோசர் உருவம்

வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு பள்ளி வளாகத்தில் 'டைனோசர்' உருவம்கரூர்,: புகழூர், அரசு பள்ளியில் வன விலங்குகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், டைனோசர் உருவம் உருவாக்கி வைத்துள்ளனர்.புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட அளவில் பசுமை பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு விலங்குகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், டைனோசர் உருவத்தை செய்து வைத்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இது குறித்து, பள்ளி தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு கூறியதாவது:வன விலங்குகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் நாள்தோறும் அழிவை சந்தித்து வருகின்றன. அதில், 430 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கு டைனோசர். இது ஒரு தாவர உண்ணி. உணவு தட்டுப்பாட்டால் டைனோசர் அழிந்திருக்க கூடும் என தெரிகிறது. இது போல் புலி, ஆசிய யானை, தேவாங்கு அழியும் பட்டியலில் உள்ளது. நாம் வாழும் காலங்களில் விலங்குகளை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், டைனோசர் போல் அழிந்த விலங்குகளை மாடல் செய்து, நம் தலைமுறைக்கு விளக்க நேரிடும். பள்ளியில், 11க்கு 3 என்ற அளவில் உள்ள டைனோசரை உருவாக்கி, வளாகத்தில் வைத்துள்ளோம். இதை பார்க்க வரும் மாணவ, மாணவியருக்கு வன விலங்கு பாதுகாப்பு அவசியம் குறித்து, ஆசிரியர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி