உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள் துவக்கம்

கரூர், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள் துவக்கம்

கரூர், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகள் துவக்கம்கரூர்,:கரூர் மற்றும் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியங்களில், பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் மாநகராட்சி, பெரிய குளத்துபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கரூர் வாங்கல் குப்புச்சிபாளையம் கிளை நுாலகத்திற்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி என மொத்தம், 1 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டுமான பணிகளை, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், மாவட்ட நுாலக அலுவலர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை