மேலும் செய்திகள்
மனைவியை திட்டி, தாக்கிய கணவன் மீது வழக்கு பதிவு
25-Jan-2025
பெண்ணை ஏமாற்றி பாலியல் தொல்லைவாலிபர் உள்பட இருவர் மீது வழக்குகரூர்:க.பரமத்தி அருகே, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் உள்ளிட்ட இருவர் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி திருகாடுதுறை பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் லோகநாதன், 35, ஜிம் டிரைனர். இவர் அதே பகுதியை சேர்ந்த, 30 வயது பெண்ணை, பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். பிறகு, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் லோகநாதன் ஏமாற்றி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, இளம் பெண் அளித்த புகார்படி, லோகநாதன், அவரது தாய் விஜயா, 52, ஆகியோர் மீது, கரூர் ரூரல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
25-Jan-2025