கேலோ இந்தியா விளையாட்டு போட்டிஅரசு கல்லுாரி மாணவருக்கு பாராட்டு
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிஅரசு கல்லுாரி மாணவருக்கு பாராட்டுகுளித்தலை:குளித்தலை அடுத்த. கருப்பத்துார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தண்டபாணி மகன் ஜீவானந்தம். இவர், குளித்தலை அரசு கலைக்கல்லுாரியில், இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், தடகள பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில், 5.6 மீட்டர் நீளம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி, ஐந்து லட்சம் ரூபாய்க்கான பரிசு தொகையை மாணவரிடம் வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவரை, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் (பொ) அன்பரசு, தமிழ் துறைத்தலைவர் ஜெகதீசன், பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் வேணுகோபால், உடற்கல்வி இயக்குனர் (பொ) பேராசிரியர்கள் வைரமூர்த்தி, செந்தில்குமார், பிரகாஷ், மகேஸ்வரி, தேவி, மகாலட்சுமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.