உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைதடுத்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைதடுத்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைதடுத்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்கரூர்:- கரூர் மாவட்டம், புலியூர் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.மாயனுார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பெரியசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜ்குமார், பாலியல் குற்றங்களிலிருந்து எவ்வாறு குழந்தைகளை பாதுகாக்கலாம் மற்றும் தனி மனித ஒழுக்கம் பற்றி ஆசிரியர்களுக்கு விளக்கி கூறினார். கரூர் டி.எஸ்.பி., செல்வராஜ், பாலியல் குற்றங்கள் சார்ந்து பல்வேறு சட்டங்களை பற்றி பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் யுவராஜ், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 பற்றி கூறினார்.தான்தோன்றிமலை, கரூர் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை