மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்தவாலிபர் கைது
09-Mar-2025
கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீதுமோதி தந்தை பலி; மகன் படுகாயம்கரூர்:திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே எல்.புதுாரை சேர்ந்தவர் ராஜரத்தினம், 42. இவரது மகன் இளவரசன், 20. இவர்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கோடாபுலியூருக்கு சென்று விட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ராஜரத்தினம் பைக்கை ஓட்ட, இளவரசன் பின்னால் அமர்ந்திருந்தார். கரூர் குட்டக்கடை அருகே சென்றபோது, எதிர்புறம் கார்-லாரி ஆகியவை மோதி கொண்டன. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதியது. இதில் ராஜரத்தினம், இளவரசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ராஜரத்தினத்தை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, இளவரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
09-Mar-2025