உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது கரூர், கரூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்ட, 75 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பில், காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு, நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும், சாலை மறியல் போராட்டம் நடந்தது. கரூர் அருகே, வெள்ளியணை சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் வீரகடம்ப கோடி, மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன் உள்பட, 25 பெண்கள் மற்றும் 70 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி