ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்சங்க கரூர் மாவட்ட மாநாடு
கரூர், :தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை மாநாடு, மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.அதில், காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை,தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட, உரிமைகளை வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு புதிய பணியாளர்களை நிய மிக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் எஸ்.பி.எம்., திட்டத்தில் பணிபுரிகிறவர்களை பணி வரன்முறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில், மாநில துணைத்தலைவர் பாஸ்கர்பாபு, செயலாளர் வீரகடம்ப கோபு, செயற்குழு உறுப்பினர் வினோத்குமார், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் தமிழ்வாணன், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சரிதா உள்பட பலர் பங்கேற்றனர்.