உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநில அளவிலான கபடி போட்டிகரூர் வடசேரி லைன்ஸ் அணி வெற்றி

மாநில அளவிலான கபடி போட்டிகரூர் வடசேரி லைன்ஸ் அணி வெற்றி

மாநில அளவிலான கபடி போட்டிகரூர் வடசேரி லைன்ஸ் அணி வெற்றிகுளித்தலை, : குளித்தலை அருகே நடந்த மாநில கபடி போட்டியில், கரூர் வடசேரி லைன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்தது.குளித்தலை அடுத்த வடசேரியில், மாநில அளவிலான கபடி போட்டி கலைவாணர் விளையாட்டு திடலில், இரண்டு நாட்கள் நடந்தது. மணப்பாறை தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலையரசன், போட்டியை தொடங்கி வைத்து பரிசு வழங்கினார். கரூர், திருச்சி, துாத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 60 அணிகள் விளையாடின.கரூர் மாவட்டம், வடசேரி லைன்ஸ் கிளப் கபடி அணி, 18 புள்ளிகளை பெற்று முதல் பரிசாக, 40 ஆயிரம் ரூபாய், 5 அடி சுழல் கோப்பையை தட்டிச்சென்றது. 13 புள்ளிகளை பெற்று இரண்டாவது பரிசாக, 30 ஆயிரம் ரூபாய், 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையை, கரூர் மாவட்டம் புதுப்பட்டி நியூபேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் பெற்றனர். மூன்றாவது பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், 2 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையை திருவாரூர் மாவட்டம், கட்டக்குடியை சேர்ந்த கட்டக்குடி ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி அணியினரும், நான்காவது பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், 2 அடி உயரம் கொண்ட சிறப்பு கோப்பையை, திருச்சி சென்ஜோசப் கல்லுாரி அணி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை