உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்றுப்பகுதியில் நெல் அறுவடை துவக்கம்விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஆற்றுப்பகுதியில் நெல் அறுவடை துவக்கம்விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஆற்றுப்பகுதியில் நெல் அறுவடை துவக்கம்விலை குறைவால் விவசாயிகள் கவலைகரூர்:அமராவதி ஆற்றுப்பகுதிகளில், நெல் அறுவடை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. கடந்தாண்டை விட, நெல்லுக்கு குறைந்த விலை கிடைப்பதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை, கரூர் மாவட்டத்தில் பரவலாக வட கிழக்கு பருவமழை விவசாயிகளுக்கு கைகொடுத்தது. மேலும், அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான கேரளாவிலும், மழை பெய்ததால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில், சின்னதாராபுரம், ராஜபுரம், கருப்பம்பாளையம், சின்ன ஆண்டாங்கோவில் கிராம பஞ்சாயத்துகளில், 5,000 ஏக்கர் நிலங்களில் ஆந்திரா பொன்னி நெல் சாகுபடி செய்யப்பட்டது. அதை தவிர, காவிரியாற்றின் பகுதிகளான புஞ்சை தோட்டக்குறிச்சி, நெரூர், வாங்கல், லாலாப்பேட்டை, மாயனுார், குளித்தலை பகுதிகளிலும் நெல் சாகுபடி களை கட்டியது. தற்போது, அமராவதி ஆற்றுப்பகுதிகளில், விவசாய தொழிலாளர்கள் போதிய அளவில் இல்லாததால், இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை துவங்கியுள்ளது. ஆனால், நடப்பாண்டு நெல் சாகுபடி, நிலப்பரப்பு அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலை குறைந்துள்ளதாக, விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: நெல் பரப்பளவு அதிகரித்துள்ள போதிலும், டிசம்பர் மாதத்தில் போதிய மழை இல்லை. இதனால், நெல் உற்பத்தி குறைந்து விட்டது. குறிப்பாக, ஒரு ஏக்கருக்கு, 50 மூட்டை வருவதற்கு பதிலாக, 45 மூட்டைகள் மட்டும் கிடைக்கிறது. கடந்தாண்டு, ஆந்திரா பொன்னி நெல், 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,450 ரூபாய்க்கு விலை போனது. தற்போது, 100 ரூபாய் குறைவாகவே கிடைக்கிறது. சாகுபடியும் குறைந்து, விலையும் குறைந்துள்ளது. ஆனால், விவசாய ஆட்கள் கூலி, நெல் அறுவடை இயந்திர வாடகை உயர்ந்துள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை