உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில்குண்டம் இறங்கும் விழா கோலாகலம்

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில்குண்டம் இறங்கும் விழா கோலாகலம்

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவில்குண்டம் இறங்கும் விழா கோலாகலம்கரூர்:கரூர், அன்ன காமாட்சியம்மன் கோவில், 102வது ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக நடந்தது.கரூரில், பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கோவிலின், 102 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் இருந்து, கரகம் பாலித்து வரும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின், 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, கரகாட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று காலை, 11:00 முதல், மதியம், 12:00 மணி வரை பொங்கல், மாவிளக்கு பூஜையை பக்தர்கள் நடத்துவர். மாலை, 6:00 மணிக்கு கரகம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை