குடிநீருக்கு ஏற்பட்ட பிரச்னைகிராம மக்கள் கடும் அவதி
குடிநீருக்கு ஏற்பட்ட பிரச்னைகிராம மக்கள் கடும் அவதிகிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட வயலுார், கருப்பத்துார், சிந்தலவாடி, கள்ளப்பள்ளி, பஞ்சப்பட்டி, கம்மநல்லுார் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள, பொது மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, காவிரி ஆற்றில் குறைந்த நீர் மட்டுமே செல்வதால், காவிரி குடிநீர் ஏற்றும் தொட்டிகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதனால் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, போதுமான குடிநீர் வினியோகம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாரம் ஒரு முறை தண்ணீர் வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளுக்கு காவிரி குடிநீர் முறையாக வினியோகம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.