உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைப்பு

நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைப்பு

நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைப்புஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, மார்க்கம்பட்டி நான்கு முனை சாலையில், அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது.அரவக்குறிச்சி நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, மார்க்கம்பட்டி அருகே தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நான்கு முனை சந்திப்பு உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. போலீசாரால் விபத்து பகுதியாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், நெடுஞ்சாலை துறை சார்பில், விபத்தை தடுக்கும் வகையில் நான்கு முனை சந்திப்பில், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சார்பில், இரண்டு புறமும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை