மேலும் செய்திகள்
வரையாடுகளை காக்க விழிப்புணர்வு பிரசாரம்
18-Feb-2025
ஜாதி பிரச்னையை தீர்க்க விழிப்புணர்வுபிரசாரம் தேவை: மா.கம்யூ.,செயலர்கரூர்:கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், நிதியளிப்பு பொதுக்கூட்டம், மாவட்ட செயலர் ஜோதிபாசு தலைமையில், உழவர் சந்தை அருகே நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், மாநில செயலர் சண்முகம் பேசியதாவது:மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்., 2 முதல், 6 வரை மதுரையில் நடக்கிறது. அதில், இந்துத்துவா கொள்கையை முறியடிக்கும் வகையில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. பேரணியில், ஐந்து லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். கேரளாவில், 96 சதவீதம் பேருக்கு சொந்தமாக வீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதை நிறைவேற்ற சாத்தியக் கூறுகள் உள்ளன. அதற்கான திட்டம் வேண்டும். தமிழகத்தில் மாணவர்கள் இடையே, ஜாதிய பாகுபாடுகள் அதிகரித்துள்ளன. அதை தீர்க்க விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் ஜாதியின் பெயரால் தாக்கப்பட்ட, மாணவருக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும். மாணவர்கள் மீதான ஜாதிய தாக்குதல்களை தடுக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு கொடுத்த பரிந்துரைகளை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலா, மாநகர செயலர் தண்டபாணி, நிர்வாகிகள் ஜீவானந்தம், முருகேசன், ராஜா முகமது, முத்து செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
18-Feb-2025