மொபட் மீது தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி
மொபட் மீது தனியார் பஸ் மோதி மூதாட்டி பலிகரூர்:கரூரில், மொபட் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், நெரூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் காந்திமதி, 65; இவர், நேற்று மருமகள் ேஹமாவதியுடன், 30, ேஹாண்டா ஆக்டிவா மொபட்டில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரத்தினம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த காந்திமதி, அதே இடத்தில் உயிரிழந்தார். மருமகள் ேஹமாவதி சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.