உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்ன கோதுாரில் தார் சாலைஅமைக்க பா.ஜ., நிர்வாகி மனு

சின்ன கோதுாரில் தார் சாலைஅமைக்க பா.ஜ., நிர்வாகி மனு

சின்ன கோதுாரில் தார் சாலைஅமைக்க பா.ஜ., நிர்வாகி மனுகரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, சின்னகோதுார் நீலம் கார்டன் பகுதியில், தார் சாலை அமைக்க வேண்டும் என, மாநில பா.ஜ., ஓ.பி.சி., அணி துணைத்தலைவர் சிவசாமி, மாநகராட்சி ஆணையாளர் சுதாவிடம் கோரிக்கை மனு வழங்கினார்.அதில் கூறியிருப்பதாவது:கரூர் மாநகராட்சி, 1வது வார்டு சின்ன கோதுார் நீலம் கார்டனுக்கு செல்லும் சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. அந்த சாலை வழியாக, 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அவர்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர்.அந்த பகுதிக்கு, டி.டி.சி.பி., அப்ரூவல் உள்ளது. வீட்டு வரி உள்ளிட்ட, பல்வேறு இனங்கள் முறைப்படி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், புதிய தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.விரைவாக, கோதுார் நீலம் கார்டன் பகுதிக்கு செல்லும் பழுதடைந்த சாலையை, புதுப்பிக்க வேண்டும். இல்லையேல், 1 வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டு, விரைவில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை