மேலும் செய்திகள்
ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம்
24-Mar-2025
கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா - -ஜியோ ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் கலெக்டர் அலுவலகக் வளாகம் முன், போட்டா - -ஜியோ (அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் கூட்டமைப்பு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின், மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமை வகித்தார். கடந்த சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதி படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதியம், பகுதி நேர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். 2009 ஜூன் 1 முதல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி இயக்குபவர், துாய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
24-Mar-2025