முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை
கரூர், : புன்னம்சத்திரம் அருகே, பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* கரூர் அருகே, புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில், மூலவருக்கு, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது* தவிட்டுப்பாளையம் அருகே, நஞ்சைபுகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.