உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி, குழந்தைகள் மாயம் கணவன் போலீசில் புகார்

மனைவி, குழந்தைகள் மாயம் கணவன் போலீசில் புகார்

மனைவி, குழந்தைகள் மாயம் கணவன் போலீசில் புகார்கரூர் கரூர் வடக்கு நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்,37; இவருக்கு, கோகிலா,37, என்ற மனைவியும், லோகித்,12, என்ற மகனும், மஞ்சு மித்ரா, 3, என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 30 ல் கோகிலா, மகன், மகளுடன் வெளியே சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், கோகிலா குழந்தைகளுடன் செல்லவில்லை. இதுகுறித்து, கணவன் கார்த்திக் அளித்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி