சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு
சைபர் கிரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வுகரூர் : கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், காணியாளம்பட்டி அரசு பாலி டெக்னிக் கல்லுாரியில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், இணையவழி குற்றங்களில் இருந்து தப்பிக்கும் முறைகள், சைபர் கிரைம் குற்றவாளிகளிடமிருந்து வரும், மொபைல் அழைப்புகளுக்கு பதில் சொல்லாமல், உதவி எண், 1930 ஐ உடனடியாக அழைப்பது, புகார்களை www.cybercrime.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்வது குறித்து, கரூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசைவாணி பேசினார்.எஸ்.ஐ., சுதர்சன், எஸ்.எஸ்.ஐ., லலிதா மற்றும் அரசு பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.