கரூர் அருகே அம்மா பூங்காவில்சீரமைப்பு பணி தொடங்கியது
கரூர் அருகே அம்மா பூங்காவில்சீரமைப்பு பணி தொடங்கியதுகரூர்:கரூர் அருகே, புதிதாக திறக்கப்பட்ட அம்மா பூங்காவில், பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து, பெரிய ஆண்டாங்கோவிலில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, பல லட்ச ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. அதில், அம்மா உடற்பயிற்சி கூடம், நடை பயிற்சி மேற்கொள்ள எட்டு வடிவில் தளம், பூங்காவை சுற்றி நடை பயிற்சி தளம், கழிப்பிடம், சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பூங்கா பராமரிப்பு இல்லாமல், முட்புதர்கள் அதிகளவில் முளைத்துள்ளது. விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களும் சேதம் அடைந்துள்ளது. கழிப்பிடமும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் பூங்காவுக்கு செல்ல தயங்கினர். இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் பூங்காவில் நடக்கிறது.இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., நிர்வாகம் சார்பில், 100 நாள் வேலை திட்ட ஊழியர்கள் நேற்று, அம்மா பூங்காவில் இருந்த முட்புதர்களை அகற்றி, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், பெரிய ஆண்டாங்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.