உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திறந்த தரை கிரிக்கெட் போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திறந்த தரை கிரிக்கெட் போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திறந்த தரை கிரிக்கெட் போட்டிவெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகரூர்:கரூர், ஜே.சி.ஐ., சார்பில் திறந்த தரை கிரிக்கெட் போட்டிகள், சேலம் பைபாஸ் சாலை மைதானத்தில், இரண்டு நாட்கள் நடந்தது.அதில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 24 கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை பையர் டிராப்ஸ் அணி, இரண்டாம் பரிசை கியூ.எப்.சி.சி., அணி, மூன்றாம் பரிசை பிளாக் ஸ்கோர்ட் அணி, நான்காம் பரிசை கரூர் டைமண்ட் ஸ்போர்ட் அணி பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பரிசு தொகை மற்றும் கோப்பைகளை டி.ஆர்.ஓ., கண்ணன் வழங்கினார்.பரிசளிப்பு விழாவில், தொழிலதிபர் சூர்ய நாராயணன், ஜே.சி.ஐ., நிர்வாகிகள் ஜீவா நந்தன், மயில்சாமி, உத்ராபதி, நாகராஜன், மணிகண்டன், சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை