சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ.,பள்ளியில் பட்டமளிப்பு விழா
சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ.,பள்ளியில் பட்டமளிப்பு விழாகிருஷ்ணகிரி:சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியின், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி, ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்' என்ற கருப்பொருளுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. முன்னதாக, பட்டம் பெரும் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. இதில் பள்ளி நிறுவனர் டாக்டர் அன்பரசன் மற்றும் பள்ளி தாளாளர் சங்கீதா அன்பரசன் ஆகியோர் பள்ளி, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினர்.மேலும், கல்வி மற்றும் பிற இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் மூலம், மாணவர்களை வடிவமைப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்காக பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர். விழாவில், பள்ளி முதல்வர் ஷர்மிளா வாழ்த்தி பேசினார். தமிழாசிரியர் ரூபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை, பள்ளி மேலாளர் பூபேஷ் செய்திருந்தார்.