மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
30-Jan-2025
தமிழ்நாடு மின் ஊழியர்மத்திய அமைப்பினர் தர்ணாகரூர்:தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் மின் வட்ட கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.அதில், மின் வாரியத்தில் ஆரம்ப கட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், கேங்மேன் பதவியை கள உதவியாளர் பதவியாக மாற்றி அமைக்க வேண்டும், ஊதிய உயர்வு- வேலைபளு பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும், இடைக்கால நிவாரணம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.தர்ணா போராட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், துணைத்தலைவர் சுப்பிரமணியன், திட்ட பொருளாளர் ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
30-Jan-2025