விராலிபட்டி பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி
விராலிபட்டி பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கும் பணிகரூர்:கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரவணை பஞ்., விராலிபட்டி பிரிவு சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் வேகத்தடை அமைக்கும் பணி நடந்தது.கரூர் கோட்டம், கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் பிரிவு, வரவணை பஞ்., விராலிபட்டி பிரிவு சாலை அருகில் வளைவு பகுதியில், கி.மீ. 32/2ல், வேகத்தடை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் உதவி கோட்ட பொறியாளர் கர்ணன், உதவி பொறியாளர் அசாருதீன் ஆகியோர் முன்னிலையில், பிரிவு உதவியாளர் கண்ணதாசன் சாலை பணியாளர்களை கொண்டு வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.******************************