உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா

கரூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழா

கரூர் மாவட்டத்தில் உலக மகளிர் தின விழாகரூர்:கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், உலக மகளிர் தின விழா, அழகம்மை மஹாலில் நேற்று நடந்தது.அதில், இலவச உதவி எண், 181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரி வித்தார். அதை தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன், டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், சுமதி உள்பட, பலர் பங்கே ற்றனர்.* கரூர் அருகில் புலியூர் கணேசபுரத்தில், பசுமை புலியூர் அமைப்பு சார்பில் உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு மரம் நடும் விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு தலைமை வகித்தார். கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் காணிக்கை மார்த்தாள், மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில், புலியூர் டவுன் பஞ்சாயத்தில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கலாராணி, கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடந்தது. கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், கேக் வெட்டி பெண் நிர்வாகிகளுக்கு வழங்கினார். மாவட்ட துணை செயலர் மல்லிகா, மகளிர் அணி செயலர் ரேணுகா, முன்னாள் கவுன்சிலர் கமலா உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.* கரூர் மாவட்ட த.வெ.க., சார்பில், விழிப்புணர்வு கூட்டம், தலைமை தபால் நிலையம் முன் நடந்தது. அதில் தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும், பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமு றைகள், பாலியல் தொல்லை ஏற்படும் போது, காவல் துறையை அணுக வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு ஆலோசனைகளை மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் மதியழகன் விளக்கம் அளித்து பேசினார். பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ