மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
02-Mar-2025
ஸ்டாலின் பிறந்தநாள் விழாநலத்திட்ட உதவிகள் வழங்கல்பாப்பிரெட்டிப்பட்டி:-தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், பேரூராட்சிகள் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு, கிழக்கு, கடத்துார் கிழக்கு ஒன்றியங்களிலுள்ள, 27 இடங்களில் முதல்வர் ஸ்டாலினின், 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் சரவணன் நெப்போலியன், நகர செயலாளர்கள் கவுதமன், ஜெயச்சந்திரன், பேரூராட்சி தலைவர்கள் மாரி, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தி.மு.க., கொடியேற்றி, 1,000க்கும் மேற்பட்டோருக்கு இனிப்பு, இலவச வேட்டி சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பேசினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், நிர்வாகிகள் கவுதமன், தமிழ்செல்வன், தாழை பாண்டியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஷாநவாஸ், துணை அமைப்பாளர் தினேஷ், முகமது மீராசா, பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு சண்முகம், தங்கம் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
02-Mar-2025