பாசன வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
பாசன வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்புகரூர்:- பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகில், எல்லைமேடு பகுதி வழியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, பாசன வாய்க்கால் செல்கிறது. மழை காலத்தில், பாசன வாய்க்கால் தண்ணீர் பல்வேறு விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் சீரமைக்காத காரணத்தால், செடி கொடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே, பாசன வாய்க்கலை சீரமைத்து எளிதாக மழை காலங்களில் தண்ணீர் செல்லும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.