உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜெ.,பிறந்த நாளையொட்டி ரேக்ளாபோட்டி: மாஜி அமைச்சர் அழைப்பு

ஜெ.,பிறந்த நாளையொட்டி ரேக்ளாபோட்டி: மாஜி அமைச்சர் அழைப்பு

ஜெ.,பிறந்த நாளையொட்டி ரேக்ளாபோட்டி: மாஜி அமைச்சர் அழைப்புகரூர்:கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், நாளை (16ல்) குதிரை ரேக்ளா போட்டி நடக்கிறது.இதுகுறித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77 வது பிறந்த நாளையொட்டி, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி சார்பில், 14 வது குதிரை ரேக்ளா போட்டி நாளை மதியம், 2:30 மணிக்கு வாங்கல் சாலை, அரசு காலனி பிரிவில் நடக்கிறது. அதில் பெரிய குதிரை, சிறிய குதிரை மற்றும் புதிய குதிரை பிரிவில் போட்டி நடக்கிறது. வெற்றி பெறும், ஒன்று முதல் ஆறு குதிரை உரிமையாளர்களுக்கு, ரொக்க பரிசு, கேடயம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.ஏற்பாடுகளை, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ