உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடவூர் பகுதியில் மரவள்ளி கிழங்குசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கடவூர் பகுதியில் மரவள்ளி கிழங்குசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

குளித்தலை:குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.கடவூர் வட்டார பகுதிகளில், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது களையெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மண், கரிசல் மண் உள்ள நிலம் சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். மண்ணில் தழைச்சத்து அதிகமாக இருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 1,900 முதல் 2,000 கிலோ கிழங்கு தேவைப்படுகிறது. இதில் ஒவ்வொரு கரணையும் அரை அடி நீளத்துடன், 8 முதல் 10 கணுக்களுடன் இருப்பது நல்லது. விதை கரணைகளை பூசண மருந்து கரைசலில் ஊற வைத்து நடவு செய்வதால் நோய் தாக்குதலை தடுக்கலாம்.ஒரு ஏக்கருக்கு 4 கிலோ அசோஸ்பைரில்லம், 40 கிலோ மணலுடன் கலந்து நடவு செய்ய, 30 வது நாளில் இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு தழைச்சத்து, 80 கிலோ, மணிச்சத்து, 225 கிலோ, சாம்பல் சத்து, 160 கிலோ வரை தேவைப்படுகிறது. இதேபோல் நடவு செய்த, 20வது நாள் முதல் களை எடுக்க வேண்டும். அப்போது முளைக்காத கரணைகளுக்கு பதில், புதிய கரணைகளை நடவு செய்ய வேண்டும். பின்னர் மூன்றாம் மாதம் களை எடுத்து, மண் அணைக்க வேண்டும். நடவு நட்டு 60 வது நாளில் செடிக்கு, 2 கிளைகள் மட்டும் விட்டுவிட்டு மீதியை அகற்றி விடவேண்டும்.மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் வெள்ளை ஈ தாக்குதல் என்பது முக்கியமான பூச்சி. மேலும் மாவுப்பூச்சி, சிவப்பு பேன் ஆகிவையும் மரவள்ளியை தாக்குகிறது. இதற்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு 100 லிட்டர் தண்ணீருக்கு 5 கிலோ வேப்பங்கொட்டை பொடியை கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம். அல்லது ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை, 100 என்ற எண்ணிக்கையில் இட வேண்டும்.அறுவடை மற்றும் மகசூல்கிழங்கு சாகுபடி முறையில், இலைகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் கலந்து, பழுப்பு நிறமாகி உதிர ஆரம்பிக்கும் போது நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும். இவ்வாறு இருக்கும் போது சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளி கிழங்கை அறுவடை செய்ய தொடங்கலாம். சாகுபடியை தொடங்கிய நாளில் இருந்து, 240 நாட்களில் அறுவடை செய்யும் போது ஒரு ஏக்கருக்கு, 15 முதல் 20 டன் வரை கிழங்கு கிடைக்கிறது. மேற்படி ஆலோசனைகளை கடைபிடித்து, மரவள்ளக்கிங்கு சாகுபடி செய்தால், நல்ல மகசூல் பெற்று அதிகமான லாபம் பெறலாம் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ