தண்டவாளத்தில் பராமரிப்பு பணி; ஈரோடு,செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்
தண்டவாளத்தில் பராமரிப்பு பணி; ஈரோடு,செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்கரூர்:கரூர் அருகேயுள்ள, புகழூர் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (28) ரயில்வே சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், புகழூர் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக நாளை (28 ம் தேதி) ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில், திருச்சி-ஈரோடு பாசஞ்சர் ரயில் (56809 ) திருச்சிராப்பள்ளியிலிருந்து காலை 7:20 மணிக்கு புறப்பட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும். கரூரில் இருந்து ஈரோடு சந்திப்புக்கு இயக்கப்படாது.* ஈரோடு -- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில், (16845 ) ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்படும். ஆனால், பராமரிப்பு பணி காரணமாக கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அந்த ரயில் மதியம், 3:05 மணிக்கு புறப்படும்.* செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (16846) வழக்கம் போல காலை, 5:10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனோடு நிறுத்தப்படும்.* திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்(16843) திருச்சிராப்பள்ளியில் இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.