மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் கொட்டி தீர்த்த மழை
24-Mar-2025
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: அரவக்குறிச்சியில் 68 மி.மீ.,கரூர்:கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக அரவக்குறிச்சியில், 68 மி.மீ., மழை பெய்தது.தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்று, மின்னலுடன் கூடிய மழை விடிய விடிய பெய்தது. வேலாயுதம்பாளையம் அருகே, புஞ்சை புகழூர் பகுதியில், பலத்த காற்று காரணமாக, மூன்று இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன. மின் வெட்டு ஏற்பட்டது. பிறகு, மின் கம்பங்களை ஊழியர்கள் சரி செய்து, மின் வினியோகத்தை சீர்படுத்தினர்.கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 19.40, அரவக்குறிச்சி, 68, அணைப்பாளையம், 48, க.பரமத்தி, 30.60, குளித்தலை, 8.80, தோகைமலை, 4.20, கிருஷ்ணராயபுரம், 53.50, மாயனுார், 52, பஞ்சப்பட்டி, 9, கடவூர், 23, பாலவிடுதி, 25, மயிலம்பட்டி, 8 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 29.13 மி.மீ., மழை பதிவானது.
24-Mar-2025