உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிரதமர் மோடி பிறந்த நாள் விழா வெண்ணைமலை கோவிலில் வழிபாடு

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா வெண்ணைமலை கோவிலில் வழிபாடு

கரூர்: கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவிலில், பா.ஜ., சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். பிரதமர் மோடி நீண்ட ஆயுள், நல் ஆரோக்கியம் வேண்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. பின், அன்புக்கரங்கள் ஆசிரமத்தில் தங்கியுள்ள, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மகளிரணி மாநில துணைத்தலைவர் மீனா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் மகுடபதி, மாவட்ட பொதுச்செயலர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் குணசேகரன், துணைத் தலைவர்கள் செல்வன், சுப்பிரமணி, மாவட்ட செயலர் செல்வராஜ், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்து மக்கள் கட்சிகரூர் மாவட்ட, இந்து மக்கள் கட்சி சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாள் விழா மற்றும் விஸ்வகர்மா விழா, மாவட்ட தலைவர் மணி தலைமையில் நடந்தது. அதில், பிரதமர் மோடி உருவப்படத்துடன், விஸ்வகர்மா ஜெயந்தி என எழுதப்பட்ட பிளக்ஸ் பேனருக்கு மலர் துாவப்பட்டது. பிறகு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளர் சுரேஷ், இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் சிவா, சிவசேனா கட்சி (ஷின்டே பிரிவு) மாவட்ட செயலாளர் முரளி, நகர செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.கி.புரத்தில்கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிதுரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் முருகானந்தம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை