உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஊரணி காளியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை

ஊரணி காளியம்மன் கோவிலில் பெண்கள் திருவிளக்கு பூஜை

ஊரணி காளியம்மன் கோவிலில்பெண்கள் திருவிளக்கு பூஜைகரூர், நவ. 30-தான்தோன்றிமலை, ஊரணி காளியம்மன் கோவிலில், நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் கோவிலில், ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் கடந்த, 26ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பூக்குழி திருவிழா தொடங்கியது. நேற்று இரவு ஊரணி காளியம்மன் கோவில் வளாகத்தில், திருவிளக்கு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 7:00 மணிக்கு நெய் விளக்கு ஏற்றுதல், மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், மாலை, 6:00 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை