உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் டைட்டான் நிறுவனஅதிகாரியின் லேப்டாப் அபேஸ்

கரூரில் டைட்டான் நிறுவனஅதிகாரியின் லேப்டாப் அபேஸ்

கரூரில் டைட்டான் நிறுவனஅதிகாரியின் லேப்டாப் 'அபேஸ்'கரூர்,:கரூர் பஸ் ஸ்டாண்டில், டைட்டான் நிறுவன உதவி மேலாளரிடம், லேப்டாப் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, ஒண்டிபுதுார் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல், 36. இவர், கோவையில் டைட்டான் நிறுவனத்தில், உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த, 15 இரவு திருச்சியில் இருந்து, கோவை செல்ல அரசு பஸ்சில் கரூர் வந்துள்ளார். அப்போது, அவர் வைத்திருந்த லேப்டாப்பை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து, இமானுவேல் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை