பள்ளி முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம்
பள்ளி முப்பெரும் விழா ஆலோசனை கூட்டம்கரூர்,:கரூர் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியில், முப்பெரும் விழா தொடர் பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நாளை மாலை, 4:00 மணிக்கு நடை பெற உள்ள பள்ளி ஆண்டு விழா, நினைவு துாண் அடிக்கல் நாட்டு விழா, பள்ளி நுாற்றாண்டு விழா, விழாவில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கும் விபரங்கள் குறித்து பள்ளியின் முன்னாள் மாணவரும், தொழில் அதிபருமான பாஸ்கர் விளக்கம் அளித்து பேசினார்.பிறகு, முப்பெரும் விழா ஏற்பாட்டாளர்கள் பள்ளியில் நடைபெறும், முப்பெரும் விழா தொடர்பான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது, முப்பெரும் விழா நிர்வாகிகள் விசா சண்முகம், தனபதி, சிவராமன், ராஜன், மகாமுனி, பள்ளி தலைமையாசிரியை ரேவதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.