குளித்தலையில் ஹிந்து முன்னணி,பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
குளித்தலையில் ஹிந்து முன்னணி,பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம்குளித்தலை, :குளித்தலை, காந்தி சிலை முன் நேற்று மாலை ஹிந்து முன்னணி சார்பில், திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கும் வகையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் சக்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையை தமிழக அரசு பாதுகாக்க வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம் நகரம், ஒன்றியத்தை சேர்ந்த ஹிந்து முன்னணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், தோகைமலை பா.ஜ., சார்பில் தமிழக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜாபிரதீப் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய, பா.ஜ., சார்பில் லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில், திருப்பரங்குன்றத்தில் நடந்த அநீதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில், முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடந்த அநீதியை கண்டித்து, நேற்று மாலை கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், பா.ஜ., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன், முன்னாள் ஒன்றிய தலைவர் சாமிதுரை, மாநில நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.