கிருஷ்ணராயபுரம் பகுதியில் அம்மன் கோவில்களில் பூஜை
கிருஷ்ணராயபுரம் பகுதியில் அம்மன் கோவில்களில் பூஜைகிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், தை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப் பொடிகள் கொண்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.இதில் சிந்தலவாடி, லாலாப்பேட்டை, மகளிப்பட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* மாயனுார், செல்லாண்டியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.* கிருஷ்ணராயபுரம், குருநாதன் பிடாரி அழகு நாச்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. குருநாதன் சுவாமி, பிடாரி அழகு நாச்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.